Tuesday, June 30, 2009

நம் ஊரிலும் இப்படி இருந்தால்!

நேற்று பெங்களுரில், பெங்களூர் டிராபிக் போலீஸ் கமிஷனர் டிராபிக் போலீசாருக்கு ஒரு உத்திரவு போட்டுள்ளார் அதாவது இனிமேல் டிராபிக் போலீசார் வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் வழியில் நிறுத்தி சோதனை செய்யக்கூடாது, வாகனஓட்டிகள் சாலைவிதிகளை மீறினால் மட்டுமே வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும். இது மாதிரி ஒரு உத்திரவை நம்ம ஊர் போலீசாருக்கும் அரசாங்கம் பிறப்பித்தால் என்ன?

Friday, June 19, 2009

ரொம்ப நாளாச்சு!!!

பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. மீண்டும் பதிவு எழுதி தமிழ் கூறும் நல் உலகை டார்ச்சர் பண்ண வேண்டியது தான்.

Wednesday, April 8, 2009

யாஹூவின் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு இணையதளம்

இன்று ஒரு பதிவர் கூகுலின் தேர்தல் இணையதளம் பற்றி பதிவிட்டிருந்தார். கூகுலை விட தேர்தல் சிறப்பு இணையதளத்தை யாஹூ வடிவமைத்துள்ளது.
http://in.elections.yahoo.com/index.html

Tuesday, February 10, 2009

பிங்க் ஜட்டி!!!

சமீபத்தில் ராம சேனா என்ற அமைப்பினர் மங்களூரில் ஒரு பாரில் புகுந்து அங்கிருந்த பெண்களை தாக்கியது நினைவிருக்கலாம். அந்த பிரச்சனை மிக பெரியதாக விசுவரூபமெடுத்துள்ளது. அந்த அமைப்பினர் சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடகூடாது, அப்படி கொண்டாடினால், கொண்டாடுபவர்களை தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர். அதற்கு பதிலடியாக "Consortium of Pubgoing, Loose and Forward Women" என்ற அமைப்பினர் ராம சேன அமைப்பினர்க்கு "பிங்க்" நிற ஜட்டி அனுப்பிவைத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை?
http://thepinkchaddicampaign.blogspot.com/